எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல்: ஆதரவு குறித்து ரிஷாட் பதியுதீன் தகவல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல்: ஆதரவு குறித்து ரிஷாட் பதியுதீன் தகவல் | Who Is Badiuddin S Support

ஜனாதிபதி தேர்தலில் தாம் ஆதரிக்கும் வேட்பாளரை எதிர்வரும் 14ஆம் திகதி அறிவிக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானம் கட்சியின் உயர்  மட்டக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் “ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து எமது கட்சியின் உயர்பீடம் விரிவான கலந்துரையாடலை நடத்தியது.

அதன்படி எதிர்வரும் 14ஆம் திகதி காலை 10 மணிக்கு இறுதித் தீர்மானத்தை எடுப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.

நாங்கள் இன்னமும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியில் இருப்பதால் அதன் கூட்டங்களில் நாம் பங்கேற்கிறோம்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்திக்கு எங்களின் ஆதரவை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

அதே போன்று தற்போதைய ஜனாதிபதியும் தனக்கு ஆதரவு தருமாறும் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

நாம் கூறுவது என்னவென்றால் இப்போது இருக்கும் பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

நாடு மீண்டும் பழைய நிலைமைக்கு செல்ல முடியாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button