கனடாவிலுள்ள தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களுக்கு வெளியான தகவல்!
கனடாவில் (Canada) தற்காலிகமாக பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த தகவலை கனடாவின் வேலைவாய்ப்பு, பணியாளர்கள் மேம்பாடு மற்றும் அதிகாரப்பூர்வ மொழிகள் அமைச்சர் ராண்டி போயிசோனால்ட் (Randy Boissonnault) தெரிவித்துள்ளர்.
அந்தவகையில், இது தொடர்பான திட்டங்கள் மற்றும் புதிய விதிமுறைகளை அந்நாட்டு மத்திய அரசு பரிசீலித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும், கனேடிய தொழிலாளர்களை பணியமர்த்துவதை தவிர்க்க தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தை பயன்படுத்த முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கனடாவில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
எனினும் அதனை பலர் மோசடியான முறையில் பயன்படுத்துவதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.