வங்கிகளில் சேவைகளை பெறும் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
வங்கி சேவைகளைப் பெறும் வாடிக்கையாளர்கள் பல்வேறு நிதி மோசடிகளுக்கு ஆளாகும் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக சிம் அட்டைகள் மூலம் நடத்தப்படும் வங்கிப் பரிவர்த்தனைகளை (எஸ்.எம்.எஸ்) குறுஞ்செய்தி மூலம் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சேவையை செயற்படுத்துவதற்கு விழிப்பூட்டல் அவசியம் என இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது.
இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், நிதி மோசடியின் போது ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க முடியும் எனவும், வங்கி பரிவர்த்தனைகளுக்கு SMS ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு எச்சரிக்கையுடன் செயற்படும் பட்சத்தில், ஒவ்வொரு முறையும் பரிவர்த்தனை செய்யும்போது, வங்கி அல்லது சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் தொலைப்பேசிக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகளை கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மோசடியான பரிவர்த்தனை குறித்து குறுஞ்செய்தி கிடைத்தால், வங்கி அல்லது நிதி நிறுவனத்தை விரைவில் அழைத்து, தொடர்புடைய அட்டை அல்லது கணக்கை செயலிழக்கச் செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்வதன் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க முடியும் என்றும் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.