24 மாதங்களுக்கு 20,000 ரூபா வழங்கப்படும்!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியினால் நடத்தப்படும் மக்கள் சந்திப்புக்களின் ஒரு கட்டமாக நேற்று முன்தினம் (26)  இரவு சம்மாந்துறை நகரில் நடைபெற்றது.

ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதில் கலந்து கொண்டு  ஆற்றிய உரை,

மறைந்த ஜனாதிபதி  ரணசிங்க பிரேமதாச   அவர்களுடன் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் நெருக்கமாக செயல்பட்டு, கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டம் உட்பட  பல மாவட்டங்களுக்கு பல்வேறு விதமான சேவைகளை செய்தார்.

அஷ்ரப்  அவர்களுடைய முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உட்பட பல கட்சிகள் ஐக்கிய மக்கள் கூட்டணியோடும் ஐக்கிய மக்கள் சக்தியோடும்  இணைந்து கொண்டு எதிர்வரும் ஜனாதிபதி  தேர்தலை வெற்றி கொள்ளச் செய்து  அம்பாறை மாவட்ட மக்களை வெற்றியடைய செய்வோம்.

வறுமையை போக்குவதற்காக நாம் புதிய வேலை திட்டங்களை முன்னெடுப்போம்.  ஜனசவிய, சமூர்த்தி, அஸ்வெசும  போன்றவற்றில் காணப்படுகின்ற சிறந்த விடயங்களை உள்வாங்கி அவற்றில் உள்ள  குறைபாடுகளை நீக்கி புதிய வேலை திட்டத்தின் ஊடாக வறுமையை ஒழிக்க  நடவடிக்கை எடுப்போம். வறுமையில் இருக்கின்ற மக்கள் காலமெல்லாம்  தொடர்ந்தும் கையேந்திக் கொண்டு வாழ்வதற்கு  விருப்பமில்லை. அவர்களை  வறுமையில் இருந்து மீட்டெடுப்பதற்காக  நுகர்வு, முதலீடு, சேமிப்பு, உற்பத்தி, ஏற்றுமதி  ஆகிய விடயங்களை மையப்படுத்தி  வறுமையை ஒழிப்பதற்கான புதிய வேலை திட்டங்களை முன்னெடுப்போம். வறிய  குடும்பம் ஒன்றுக்கு 24 மாதங்களுக்கு 20,000 ரூபா வீதம் வழங்கி வறுமையை போக்குவதற்கான தேசிய வேலை திட்டத்தை  முன்னெடுப்போம்.

சம்மாந்துறை பகுதியில் பெரும்பாலானோர்  விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். இந்த விவசாயிகளுக்கு தரத்தில் உயர்ந்த 50 கிலோ கிராம் உர மூடை ஒன்றை 5,000 ரூபாவிற்கு  வழங்குவதோடு, சாதாரண விலைக்கு இரசாயன மருந்துகளையும்  எரிபொருளுக்கான நிவாரணங்களையும்  வழங்கி, ஊழலும் மோசடியும் இல்லாத வகையில் உரம் கிடைப்பதற்கு ஏற்பாடுகளை செய்வோம்.

அதேபோன்று QR முறையில்  விவசாயிகளுக்கும் மீன் பிடித்தொழிலாளிகளுக்கும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கும், பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடுவோருக்கும் நிவாரண அடிப்படையில் எரிபொருள் வழங்குவதோடு  சக்தி திட்டத்தின் கீழ் ஆலை உரிமையாளர்களுக்கும் எரிபொருள் நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுப்போம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொரோனா தொற்று என்பனவற்றின் காரணமாக விவசாயிகள் பல  அசௌகரியங்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். கடன் சுமைக்குள் சிக்கி இருக்கின்ற அவர்களுடைய விவசாய கடனையும் இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுப்போம்.

அதேபோன்று ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக விவசாயிகளின் உற்பத்திக்கு நியாயமான விலை ஒன்றை  வெற்றிக் கொடுப்பதோடு, நுகர்வோருக்கும்  பாதிப்பில்லாத வகையில் அரிசியை பெற முடியுமான வகையிலும், விவசாயிகளையும்  நுகர்வோரையும் பாதுகாக்கும் வகையிலான  வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம்.

மூச்சு மற்றும் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் ஊடாக சம்மாந்துறைக்கு நாங்கள் வளங்களை பெற்றுக் கொடுத்துள்ளோம். 76 வருட  ஜனநாயக வரலாற்றிலே  எதிர்க்கட்சியாக இருந்து  சேவை செய்து காட்டியுள்ளோம்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளையும் சகல வசதிகளையும் கொண்ட வைத்தியசாலைகளாக  மாற்றுவோம். அம்பாறை மாவட்டத்தில்  வைத்தியசாலைகளையும் பாடசாலை கட்டமைப்பையும் அபிவிருத்தி அடையச் செய்வதற்கு அரசாங்கத்தினால் நிதி ஒதுக்குவதோடு, அதற்கு மேலதிகமாக  வெளிநாட்டு உதவிகளையும் பெற்று,  அதனூடாக மக்களின் கல்வி சுகாதார உரிமையை வளப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். அதேபோன்று  அம்பாறையில் உற்பத்தி துறை தொழிற்சாலைகளை நிறுவி, அதனூடாக  தொழில் வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு  தொழில்களைப் பெற்றுக்கொடுக்கவும் 10 இலட்சம் தொழில் முனைவோர்களை உருவாக்கவும் நாம் எதிர்பார்த்து உள்ளோம்.

அம்பாறை மாவட்டத்திலே கம்உதவா நகரங்களை உருவாக்கி மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தி நாட்டை வளப்படுத்துகின்ற யுகத்தை நாம் உருவாக்குவோம் என்று தெரிவித்தார்.
 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button