அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர் சேவையில் – ஜனாதிபதி இணக்கம்
தற்போது அரச பாடசாலைகளில் ஆசிரியர்களாக கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர் குழுவை பயிலுனர்களாக இணைத்து ஆசிரியர் சேவையில் உள்வாங்குமாறு ஜனாதிபதி அறிவித்ததாக இன்று (03) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“ஏற்கனவே அரசுப் பாடசாலைகளில் ஆசிரியர்களாகப் பணிபுரியும் அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குறித்தும் பொது சேவைகள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு எங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதற்கு அமைச்சரவை என்ற வகையில் நாங்கள் உடன்படவில்லை.