அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தீர்மானம் : அமைச்சர் அளித்த உறுதிமொழி

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான  தீர்மானமானது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் தாக்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.

அத்துடன், இது 2025 ஜனவரியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நீண்டகாலத் திட்டத்தின் ஒரு பகுதியாகும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அகுனகொலபலஸ்ஸில் நேற்று (08) நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் உரையாற்றிபோதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர் மகிந்த அமரவீர, “சம்பள உயர்வு தேர்தல் பிரசாரத்துடன் பிணைக்கப்பட்ட பொய்யான வாக்குறுதி என்று சில அரசியல்வாதிகள் கூறுகின்றனர். அவற்றை நான் முற்றாக நிராகரிக்கின்றேன்.

நாட்டில்  நிலவும் பொருளாதார சூழ்நிலையில், ஊழியர்கள் தற்பொழுது பெரும் சம்பளத்தில் வாழ்வது மிகவும் கடினமானது என்பது அமைச்சரவைக்குள்ளேயே நன்கு அறியப்பட்ட ஒரு விடயம்.

அத்துடன், அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு இரண்டையும் 2025 ஆம் ஆண்டிலிருந்து அதிகரிக்க அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் காலதாமதத்தை ஏற்படுத்தினாலும், இந்த நடவடிக்கைகள் தொடர்பாக வரவு செலவு திட்ட சமர்ப்பிப்பின் போது முறையாக அறிவிக்கப்படவுள்ளன.” என்றார்.

அத்துடன், அரச ஊழியர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில் இந்த சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக மகிந்த அமரவீர வலியுறுத்தியுள்ளதுடன், அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button