அரச வாகனங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுக்கவுள்ள முடிவு

அரச வாகனங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுக்கவுள்ள முடிவு | Govt Decision Regarding Government Vehicles

அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களில் அரச இலச்சினையைப் பயன்படுத்தி அமைச்சு, திணைக்களம் அல்லது நிறுவனங்களின் பெயரைப் பயன்படுத்துவது தொடர்பான சுற்றறிக்கையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதன்போது, ​​வாகனங்களை வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் இவ்வாறு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டு வாகனங்களுக்கு அரச இலச்சினை மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்துவதற்கான சுற்றறிக்கையை பொது நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சீர்திருத்தங்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.

அரச சின்னங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக 1992ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை மீளாய்வு செய்து அந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

1992 ஆம் ஆண்டு சுற்றறிக்கையில் வாகனங்களில் அரச இலச்சினையைப் பயன்படுத்துவது தொடர்பாக மட்டுமே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் அந்த அறிவுறுத்தல்கள் முறையாக பின்பற்றப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரச இலச்சினையுடன் அமைச்சு, திணைக்களம் அல்லது நிறுவனத்தின் பெயரும் குறிப்பிடப்பட வேண்டும் என திருத்தப்பட்ட சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button