உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு
2023ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பாக 22.08.2024 அன்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தேர்தல் ஆணைக்குழு உரிய மரியாதையுடன் கவனத்தில் எடுத்துக் கொண்டது என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தேர்தல்கள் ஆணைக்குழு தனது பங்களிப்பை முழுமையாக புரிந்து கொண்டு இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக செயற்படுவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட தேர்தலை நடத்துவதன் பங்கைக் கருத்தில் கொண்டு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதிதியை விரைவில் நிர்ணயம் செய்ய ஆணைக்குழு செயல்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, பாராளுமன்றத் தேர்தலுக்கு இடையே முன்னதாக தீர்மானிக்கப்பட்ட எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.