சுற்றுலாத்துறை மூலம் இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் டொலர்கள்
இலங்கைக்கு இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுற்றுலாத்துறை மூலம் பல மில்லியன் வருமானம் கிடைத்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.
அதன்படி 2024 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களின் சுற்றுலாத்துறை மூலம் 2.16 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் செப்டெம்பர் மாதத்தில் 122,140 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி மாதம் 1 ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை 1,484,808 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டில் 1,487,303 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த மாதத்தில இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில் மொத்த சுற்றுலாப் பயணிகளில் 21.6 சதவீதமானோர் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.