தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிப்பு!

தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிப்பு!

2024 ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடையவிருந்த பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்காக திகதி, 2024 ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி (வியாழக்கிழமை) நள்ளிரவு 12.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.

தபாலில் ஏற்படக்கூடிய காலதாமதங்களையும் ஆணைக்குழுவுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளையும் கவனத்திலெடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதியன்று அதாவது, 2024 ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர் அவை உரிய மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களுக்குக் கிடைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறும்போது ஏற்படக்கூடிய காலதாமதத்தைத் தவிர்க்கும் முகமாக 2024 ஒக்டோபர் மாதம் 09, 10 ஆகிய இரு தினங்களிலும், பூரணப்படுத்திய தபால் வாக்கு விண்ணப்பங்களை தபாலுக்கு ஒப்படைப்பதைத் தவிர்த்து, அவற்றை ஒவ்வொரு மாவட்ட வாரியாக வேறு பிரித்து வெவ்வேறு கடிதவுறைகளில் இட்டு அத்தாட்சிப்படுத்தும் அலுவலர் அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்தின் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்து ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பது மிகவும் உகந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எக்காரணங்கொண்டும் இத்திகதி இனிமேல் நீடிக்கப்பட மாட்டாது என்பதையும் தயவுடன் கவனத்திற்கொள்ளவும் என
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button