குறிவைக்கப்பட்ட முன்னாள் எம்.பிக்களின் சொத்துகள்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் தமது சொத்துக்கள் குறித்த கணக்குகளை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு (Commission to Investigate Allegations of Bribery or Corruption)அறிவித்துள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் இரண்டு வாரங்களுக்குள் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சொத்துப் பிரகடனங்களை மீள சமர்ப்பிக்க வேண்டும் என புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே சொத்துப் பொறுப்பு அறிக்கையை வழங்கத் தொடங்கியுள்ளனர்.

பொதுவாக, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருக்கும் போது, ​​ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னதாக சபாநாயகரிடம் தனது சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

இதனடிப்படையில், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் திட்டமிட்டபடி இந்த ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, கடந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை வகித்து அரசாங்க வீடுகளில் வசித்த 31 அரசியல்வாதிகளில் 11 பேர் மாத்திரமே குறித்த வீடுகளை காலி செய்துள்ளதாகவும் பொது நிர்வாக அமைச்சு தெரிவித்திருந்தது.’

மேலும், கடந்த அரசாங்கங்கள் அமைச்சர்களின் பாவனைக்காக கொழும்பு (Colombo) நகரில் வீடுகளை ஒதுக்கியிருந்த நிலையில் புதிய அரசாங்கத்தின் கொள்கைகளின் அடிப்படையில் புதிய நடவடிக்கை ஏதாவது எடுக்கப்படலாமென எதிர்ப்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button