நாடாளுமன்ற தேர்தல் திகதி தொடர்பில் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டு!

நாடாளுமன்ற தேர்தல் திகதியில் மாற்றம்?... சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டு | Parliamentary General Election Date Change

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் திகதியில் ஓரிரு நாட்களில் மாற்றம் இடம்பெறலாம் அரசு வட்டார தகவல்களை மேற்கொள்காட்டி கருத்துக்கள் முன்வைக்கப்படகின்றன.

நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 10ஆவது பிரிவின் ஒழுக்குகளுக்கு அமைய இந்த மாற்றம் இடம்பெற வாய்புள்ளதாக பத்திரிகை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில், நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 10ஆவது பிரிவின்படி தேர்தலுக்கான திகதிகள் ஒதுக்கப்படுவதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வேட்புமனுக்கள் ஏற்கப்படும் நாளிலிருந்து ஐந்து வாரங்களுக்கு குறையாமலும், ஏழு வாரங்களுக்கு மிகாமலும் வாக்குப்பதிவுக்கான திகதி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று சட்டம் தெளிவாகக் கூறுகிறுவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதன்படி, வேட்புமனுக்கள் ஏற்கும் பணி முடிவடைந்த ஒக்டோபர் 11ஆம் திகதி முதல் ஐந்து வார கால அவகாசம் நவம்பர் 15ஆம் திகதியும், ஏழு வார கால அவகாசம் நவம்பர் 29ஆம் திகதியும் நிறைவடைகிறது.

எவ்வாறாயினும், தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நவம்பர் 14ஆம் திகதி சட்டக் காலத்திற்கு இடம்பெறாததால், அன்றைய தினம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது சட்டத்திற்கு முரணானது என அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது மக்களின் இறையாண்மையை மீறுவதாக சட்ட நிபுணர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையமும் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில், சட்ட ஆலோசனைக்குப் பிறகு, நாடாளுமன்றத் தேர்தல் திகதி மாற்றப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, புதிய திகதியை குறிப்பிட்டு புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக, செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button