அரச வீடுகளுக்காக 80 புதிய எம்.பிக்கள் வரிசையில்.!
மாதிவெல நாடாளுமன்ற குடியிருப்பு தொகுதியில் இருந்து வீடுகளைப் பெறுவதற்கு 80 புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் விண்ணப்பித்துள்ளதாக நாடாளுமன்றத்தின் சிரேஷ்ட தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் சுமார் 60 பேர் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றும் கூறப்படுகிறது.
இதேவேளை, ஏழு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னமும் மாதிவெல நாடாளுமன்ற குடியிருப்பு தொகுதியில் இருந்து வெளியேறாமல் தங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், குறித்த ஏழு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விரைவில் வீடுகளை விட்டு வெளியேறவுள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில், மாதிவெல நாடாளுமன்ற குடியிருப்பு தொகுதியிருந்து புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீடுகள் ஒதுக்கீட்டுப் பணிகள் எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதன்போது, கொழும்பில் இருந்து நாற்பது கிலோமீற்றர்களுக்குள் சொந்த வீடுகள் இல்லாத தொலைதூர மாகாணங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
இந்த நாட்களில், புதிய நாடாளுமன்ற வீடு வழங்குவதற்காக, நாடாளுமன்ற குடியிருப்பு வளாகத்தில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி, சுமார் 110 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறித்த குடியிருப்பு தொகுதியில் உத்தியோகபூர்வ வீடுகள் ஒதுக்கப்பட உள்ளன.