கைவிடப்பட்ட அரச வீட்டுத்திட்டங்கள் மீள ஆரம்பம் : வெளியான அறிவிப்பு

கைவிடப்பட்ட அரச வீட்டுத்திட்டங்கள் மீள ஆரம்பம் : வெளியான அறிவிப்பு | Decision To Restart Abandoned Gov Housing Projects

இடைநடுவே கைவிடப்பட்டுள்ள 12 அரச வீட்டுத்திட்டங்களின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு குறித்த தீர்மானத்தை முன்வைத்துள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபை, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட பல நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

புதிய ஒப்பந்ததாரர்கள் மூலம் கட்டுமானப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button