வடக்கு உட்பட பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை !

வடக்கு உட்பட பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை ! | Today Weather Report Sl Tamil Meteorology Warning

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (23) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில், தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ. வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது (30-40) கி.மீ. வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்களிலும் காலி மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படலாம்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக உள்ளூர்மயமாக்கப்பட்ட பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button