ஐபிஎல் 2025 போட்டிகள் அட்டவணை வெளியீடு
ஐ.பி.எல் 2025 தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐ.பி.எல் தொடர் இந்த வருடம் மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் என மொத்தம் 10 அணிகள் மோதவுள்ளன.
முதல் போட்டியில் நடப்பு ஐபிஎல் தொடரின் கடந்த முறை செம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும பெங்களூரு அணி உடன் மோத உள்ளது.
இந்தப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
அதே போன்று முதல் ப்ளே ஆஃப் சுற்று ஐதராபாத் மைதானத்திலும் இறுதி போட்டி கொல்கத்தா மைதானத்தில் நடைபெற உள்ளது.
சி.எஸ்.கே அணியின் முதல் போட்டி மார்ச் 23ஆம் திகதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சிஎஸ்கே மும்பை அணியை எதிர்த்து விளையாட உள்ளது.
இந்த போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதே போன்று ஆர்சிபி அணி உடனும், மும்பை அணியுடனும் சிஎஸ்கே அணி 2 போட்டிகளில் விளையாட உள்ளது.
தகுதிகாண் சுற்று 1 போட்டி மே 20 ஆம் திகதியும் எலிமினேட்டர் போட்டி மே 21 ஆம் திகதியும் ஐதராபாத்தில் நடைபெறுகிறது.
தகுதிகாண் சுற்று 2 போட்டி மே 23 ஆம் திகதியும் ஐ.பி.எல். 2025 இறுதிப் போட்டி கொல்கத்தாவில் மே 25ஆம் திகதியும் கொல்கத்தாவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.