பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு
கிழக்கு மாகாணத்தில் (Eastern Province) உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகா சிவராத்திரியை முன்னிட்டு குறித்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர (Jayantha Lal Ratnasekera) தெரிவித்துள்ளார்.
இந்த விடுமுறைக்கு பதிலாக மார்ச் மாதம் 1 ஆம் திகதி (சனிக்கிழமை) பாடசாலை கற்றல் செயற்பாடுகள் நடைபெறும் என ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் வழமை போல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த தினத்தில் (27) வடக்கு மாகாண பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.