காலநிலை மாற்றம் தொடர்பான அறிவிப்பு!

காலநிலை மாற்றம் தொடர்பான அறிவிப்பு! | Climate Change Warning

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இன்றைய தினம் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய பகுதிகளில், மாலை அல்லது இரவில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button