ஓய்வூதியம் பெறப்போகும் புதிய தரப்பு: அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்

ஓய்வூதியம் பெறப்போகும் புதிய தரப்பு: அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல் | Pension Scheme For Those Involved Tourism Sector

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த ஆண்டு பங்களிப்பு ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க (Ruwan Ranasinghe) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இது தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் எழுப்பபப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, சுற்றுலாத் துறையில் ஈடுபடுபவர்களுக்கான சமூக நலத்திட்டமும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை,சுற்றுலாத் துறையின் எதிர்காலத்திற்காக 100 சுற்றுலா தலங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டு வருவதாகவும், அதன் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஒவ்வொரு தலத்திற்கும் ரூ.10 மில்லியன் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சுற்றுலாப் பயணிகளுக்காக ஓய்வு மையங்களை நிர்மாணிக்க அரசாங்கம் தற்போது முடிவு செய்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் ருவான் சமிந்த ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button