நாட்டில் நடைமுறையாகப்போகும் புதிய தடை சட்டம்
சிறுவர்கள் மீதான உடல் ரீதியான தண்டனையை தடை செய்வதற்கான புதிய சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார (Harshana Nanayakkara) நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த சட்டத்தின் மூலம் அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளும் தடை செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்களுக்கு செவி சாய்ப்பது மற்றும் அவர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அவர்களின் கருத்துக்களை வரவேற்பது போன்ற விதிமுறைகளும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களுக்கு பயன்படுத்துவதை தடை செய்து விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.