இரண்டாக பிரியப்போகும் கண்டம் : ஆசியாவுக்கு ஆபத்து ஏற்படுமா..!
மீண்டும் புவியியல் மாற்றத்தால், புதிய நிலப்பரப்பு மற்றும் கடல் பகுதி உருவாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டெக்டானிக் செயல்பட்டால், ஆப்பிரிக்கா கண்டம் இரண்டு நிலப்பகுதிகளாக பிரிந்து, புதிய கடற்பரப்பு உருவாகும் என தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கடந்த 2005 ஆம் ஆண்டு, எத்தியோப்பியா பாலைவனத்தில் 56 கிலோமீட்டர் நீளத்திற்கு மிகப்பெரிய ஏற்பட்ட விரிசலை, ஆப்பிரிக்கா பிளவுக்கான முதல் அறிகுறியாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
அதை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு தென்மேற்கு கென்யாவிலும் இதே போல் பல கிலோமீட்டர் நிளத்திற்கு மிகப்பெரிய நில விரிசல் ஏற்பட்டது.
இந்த ஆப்பிரிக்க நில விரிசல், பிரதானமாக ஆப்பிரிக்க டெக்டோனிக் தகடு மற்றும் சோமாலி டெக்டோனிக் தகடுகளின் இயக்கம் காரணமாகவே நிகழ்ந்துள்ளது.
ஆண்டுக்கு சில அங்குலம் பிளவு ஏற்பட்டு, முழுவதும் தனி தனி கண்டங்களாக பிரியவும், புதிய கடல் உருவாகவும் 5 முதல் 10 மில்லியன் ஆண்டுகள் ஆகலாம் என கூறப்படுகிறது.
மேலும், கிழக்கு ஆப்பிரிக்காவின் நிலத்திற்கு கீழே, 410 முதல் 660 கிமீ ஆழத்தில் பெரிய அளவில் நீர் தேக்கம் உள்ளதாகவும், இந்த பிளவின் போது இந்த நீர்த்தேக்கம் வெளிப்படும் என கூறுகின்றனர்.
பிளவு ஏற்பட்ட பகுதிகள், நீரால் சூழப்பட்டு அங்கு புதிய கடல் ஒன்று உருவாகும் எனவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக நிலத்தால் சூழப்பட்டுள்ள எத்தியோப்பியா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகள் கடற்கரையை பெரும் என கூறப்படுகிறது.
இதே வேளையில் இந்த புதிய கண்டம் மற்றும் கடல் உருவாக்குவதால் ஆசிய கண்டத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.