அதிரடியாக கைது செய்யப்பட்ட குவாசி நீதிபதி: வெளியான பின்னணி
லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குவாசி நீதிபதி ஒருவரை லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்துள்ளது.
கண்டி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மனுதாரரின் மகன் தாக்கல் செய்த விவாகரத்து வழக்கின் முடிவை விரைவுபடுத்தி அந்த முடிவை வெளியிடுவதற்காக, சந்தேக நபர் சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து இரண்டு லட்சம் ரூபாய் லஞ்சம் கோரியிருந்ததாக கூறப்படுகிறது.
அதன்படி, கண்டி நீதித்துறை வளாகத்தில் அமைந்துள்ள காதி நீதிமன்றத்தில், தீர்ப்பின் நகலையும் விவாகரத்துச் சான்றிதழையும் வழங்குவதற்காக இந்த லஞ்சம் கேட்டுப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் இன்று (21) காலை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் கெலியோயா குவாசி சேர்ந்த நீதிபதி என்பதுடன், சந்தேக நபர் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.