அடிக்கடி சிக்கன் சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! சுவையோடு ஆரோக்கியம்
சிக்கன் சூப் ருசிப்பது என்றால் பலருக்கும் அலாதி பிரியம் இருக்கும்..! சிக்கன் சூப் நினைவாற்றலை அதிகரிப்பதோடு உடலுக்கும் உற்சாகம் தரும் என்று கூறியுள்ளது ஒரு ஆய்வு முடிவு.
காய்ச்சல்
மழைகாலத்தில் பலரும் சளி, காய்ச்சலால் அவதிப்படுவர், அந்த சமயத்தில் சிக்கன் சூப் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். விரைவாக சளியை அகற்றும், உடல் வலியை போக்கவும் உதவி புரியும்
மிளகு கொஞ்சம் தூக்கலாக சேர்த்து மூக்கு மற்றும் கண்களில் நீர் வழிய பருகும் சிக்கன் சூப் மூக்கடைப்பை நீக்கி சுவாசத்தை சீராக்கிவிடும்.
புரத சத்து
புரத சத்து நிறைந்த சிக்கன் சூப் உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியை அளித்து சோர்வை நீக்கும்.
சிக்கன் சூப், உருளைக்கிழங்கு மசியல், பாலாடைக்கட்டியுடன் மக்ரோனி போன்றவை நலமளிக்கும் உணவுகள். தனிமையால் ஏற்படும் வெறுப்பை, விரக்தியை அவை போக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்
இந்த உணவுகள் ஒருவேளை ரத்த நாளங்களுக்கு நன்மை பயப்பதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால், சலிப்பான உணர்வுகளைத் தணிய வைக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.