வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கைக்கான வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) ஏப்ரல் 29 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனூடாக, இறக்குமதி செய்யப்பட்டும் பல்வேறு காரணங்களால் விடுவிக்க முடியாமல் துறைமுகத்தில் காணப்படும் பல வகையான கார்களை விடுவிக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் விளக்கமளித்த இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே (Prasad Manage), “ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களாக இந்த வாகனங்களை எங்களால் விடுவித்துக்கொள்ள முடியவில்லை.

புதிய வர்த்தமானி வெளியிட்டதன் காரணமாக Hybrid Toyota Raize மற்றும் Hybrid Nissan X-TRAIL ஆகியவற்றை இப்போது பெற்றுக்கொள்ள முடியும். இதேபோல், இந்த தொழில்நுட்பத்தின் கீழ் வரும் ஏனைய வாகனங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.” என தெரிவித்தார்.

இதேவேளை, பதிவு செய்யப்படாத புதிய மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, இறக்குமதி அனுமதிகளைப் பெற்று புதிய மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button