ரணிலின் வெளிநாட்டு பயணம் தொடர்பில் வெளியான தகவல்

ரணிலின் வெளிநாட்டு பயணம் தொடர்பில் வெளியான தகவல் | Ranil Flew Abroad 33 Times In Three Years

ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe), ஜனாதிபதியாக பதவிவகித்த காலப்பகுதியில்,33 தடவைகள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இந்தப் பயணம் 2022 ஆம் ஆண்டு முதல், 2024 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்தில்,இன்று வியாழக்கிழமை (08)வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ(nalinda jayatissa), பதிலளிக்கும் போதே மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.

இதன்படி 2022 ஆம் ஆண்டு 14 தடவைகளும், 2023 ஆம் ஆண்டு 14 தடவைகளும், 2024 ஆம் ஆண்டு 05 தடவைகளும் வெளிநாடுகளுக்கு விஜயம் செய்துள்ளார்.

இந்த விஜயங்களின் போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் செலவிட்டுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button