தாமரைக் கோபுரத்தில் ஏற்படவுள்ள மக்களை கவரும் மாற்றம்
இம்முறை வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு தாமரைக் கோபுரத்தில் மக்களை கவரும் வகையில் அதிநவீன டிஜிட்டல் அலங்காரங்கள் செய்யப்படவுள்ளதாக தெரியவருகிறது.
வெசாக் பண்டிகையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், கோபுரத்தில் டிஜிட்டல் தோரணங்கள், பௌத்த இதிகாசங்களை சித்தரிக்கும் திரை அலங்காரங்கள், நியோன் மின் விளக்குகள், மற்றும் தரைக்கட்டமைப்பு மின் விளக்குகள் என பன்முகக் கலையமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் யோகேஸ்வரன் நிரோஜன் தெரிவிக்கையில்,
தெற்காசியாவின் முதலாவது டிஜிட்டல் கலை அருங்காட்சியகமாக தாமரைக் கோபுரத்தை வடிவமைத்துள்ளோம்.
இதன்மூலம் புனித வெசாக் பௌர்ணமியின் மகத்துவத்தை மக்கள் டிஜிட்டல் அனுபவம் வாயிலாக ரசிக்கக்கூடியதாக அமைத்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.