பெரிய வெங்காயத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பெரிய வெங்காயத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | 1 Kg Red Onion Price In Sri Lanka Today

சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில், இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் ஒரு கிலோ மொத்த விலை 80 ரூபாயாகக் குறைந்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், சீனா (China) போன்ற நாடுகளிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதால் வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த பண்டிகை காலத்தில், ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் சில்லறை விலை 280 ரூபாவாக உயர்ந்திருந்தது.

நாட்டில் ஒரு நாளைக்கு பெரிய வெங்காயம் நுகர்வு சுமார் 778 மெட்ரிக் டன் ஆகும்.

​​கடந்த சிறுபோகப் பருவத்தில் பயிரிடப்பட்ட உள்ளூர் பெரிய வெங்காயத்தின் இருப்பு தீர்ந்து விட்டதன் காரணமாக பத்து மாதங்களுக்கு பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் ஒரு கிலோ மொத்த விலை 80 ரூபாயாகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button