2025 உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

2025 உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல் | Dept Of Examinations Announced Gce Al Exam Dates

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நடைபெற உள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயம் பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2024 (2025) – கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பரீட்சை மீள் மதிப்பீட்டு விண்ணப்பங்கள் ஜூலை 14 முதல் 28 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் விசாரணைகள் தேவைப்பட்டால், பரீட்சைத் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1911 க்கு அழைப்பதன் மூலமோ அல்லது பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளையின் தொலைபேசி இலக்கங்களான 0112-785922, 0112-784208, 0112-786616 மற்றும் 0112-784537 ஆகியவற்றின் மூலமோ விசாரணைகளை மேற்கொள்ளலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button