2026 இல் பொருளாதாராத்தை கொரோனாவிற்கு முந்தைய நிலைக்கு கொண்டுவர திட்டம்
2026 இல் இலங்கை பொருளாதாரத்தை கொரோனாவிற்கு முந்தைய நிலைக்கு கொண்டுவரும் நோக்கத்துடன் அரசாங்கம் செயற்படுவதாக இராஜாங்க அமைச்சர் செகான் சேமசிங்க தெரிவித்துள்ளார்
ரொய்ட்டர் நெக்ஸ்ட் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பிரிட்டனிடமிருந்து 1948 இல் சுதந்திரம் கிடைத்த பின்னர் இலங்கை எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு பொருளாதாரத்தை தவறாக கையாண்டமை சுற்றுலாத்துறையை முற்றாக செயல் இழக்க செய்த கொவிட் ஆகியன காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.