இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இடங்களின் பட்டியலில் – இலங்கையும் இடம்பிடிப்பு!
2023 ஆம் ஆண்டில் உலகில் அதிகம் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட 50 இடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பிக் 7 ட்ரவல் (Big 7 Travel) எனப்படும் சர்வதேச இணையத்தளம் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
குறித்த பட்டியலின்படி, இலங்கை மற்றும் மாலைதீவு போன்ற ஆசிய நாடுகள் முன்னணியில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிக் 7 ட்ரவலின் பட்டியலின்படி, இத்தாலியின் மிலன் முதலிடத்தையும், இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டன் இரண்டாவது இடத்தையும், பிரான்ஸ் இன் பாரிஸ் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது.
இதேவேளை, இஸ்தான்புல், நியூயோர்க், நேபாளம், சிக்காகோ, பாலி, இலங்கை மற்றும் சிட்னி ஆகியவை முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.
குறித்த பட்டியலின் படி, இலங்கைக்கு 9 ஆவது இடம் கிடைத்துள்ளதுடன், 13 மில்லியனுக்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் ஹேஷ்டேக்குகள் மற்றும் 16.4 பில்லியன் டிக் டொக் (TikTok) பார்வையாளர்களை இலங்கையின் இடங்கள் கொண்டுள்ளன.
அந்தவகையில், சிகிரியாவின் பழங்கால பாறை, கோட்டையிலிருந்து தென் கடற்கரை வரை பிரமிக்க வைக்கும் கடற்கரைகள், கலாச்சார, இயற்கை மற்றும் வரலாற்று சிறப்புமிக்க தனித்துவமான அம்சங்கள் இலங்கையை ஈர்ப்பதாக குறித்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.