தெலுங்கு திரைப்பட உலகின் பிரபல இயக்குநா் கே.விஸ்வநாத் (92) ஹைதராபாதில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை (பிப்.2) காலமானாா்.
1992-இல் பத்மஸ்ரீ, 2016 இல் தாதாசாகேப் பால்கே விருது ஆகியவற்றைப் பெற்றவா் இயக்குநா் கே.விஸ்வநாத். சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, ஸ்வா்ணகமலம் போன்ற சிறந்த திரைப்படங்களை இயக்கியவா்; யாரடி நீ மோகினி, சிங்கம் 2, உத்தம வில்லன், லிங்கா உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளாா்.