வீதிக்கு இறங்க தயாராகும் அரச ஊழியர்கள்!
அரச ஊழியர்கள் மீதான வரிகளை நீக்குவதற்கு அரசாங்கம் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு பின்னர் அரச நிறுவனங்களை மூடி அனைத்து அரச ஊழியர்களும் வீதிக்கு இறங்குவர் என அரச தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தமது பிரச்சினைகள் தொடர்பில் நிதி அமைச்சில் நேற்று கடிதம் ஒன்றை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளே இதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் கூறுகையில், அரச ஊழியர்கள் தங்களின் வருமானத்திற்கு ஏற்றாற் போன்றே வங்கிகளில் கடனை பெற்றுள்ளனர். இவ்வாறான நிலைமையில் எமது சம்பளத்திற்கு வரிகளை அதிகரித்து சம்பளத்தை கடனுக்கும், வரிக்கும் எடுத்ததும் கையில் எதுவும் எஞ்சுவதில்லை.
நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்ற அரசாங்கத்தினால் அரச சேவையை வங்குரோத்து நிலைக்கு கொண்டு செல்ல முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.