கனடாவில் அதிகரிக்கும் வேலை வாய்ப்புகள் – பணி நேரத்திலும் மாற்றம்
கனடாவில் வேலை வாய்ப்பு எண்ணிக்கை எதிர்பார்க்கப்பட்டதனை விடவும் அதிகமாக உயர்வடைந்துள்ளது.
கனேடிய தொழிற்சந்தை தொடர்பில் நிபுணர்கள் வெளியிட்ட கருத்துக்கு முற்றிலும் முரணான வகையில் தொழிற்சந்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 153000 புதிய வேலை வாய்ப்புக்கள் கனடாவில் உருவாக்கப்பட்டுள்ளதாக கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த 2022ம் அண்டு செப்டம்பர் மாதம் முதல் கனடாவில் தொழில் சந்தை சாதக நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் முழு நேரத் தொழில்களே அதிகளவில் உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 25 வயது முதல் 54 வயது வரையிலானவர்கள் அதிகளவில் தொழில் வாய்ப்பு பெற்றுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.