இந்தியா அசாம் மாநிலத்திலும் நிலநடுக்கம் பதிவு!

இந்தியா அசாமில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று (12) மாலை 4.18 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதோடு, இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் வெளியாகவில்லை என கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button