ரணில் உயிருடன் இருக்கும் வரை தேர்தல் இல்லை- மைத்திரி தரப்பு அறிவிப்பு
தபால் வாக்களிப்பை பிற்போடுவது தேர்தலை அறிவித்ததன் பின்னர் ஜனநாயகத்தின் மீதான அரசாங்கத்தின் முதல் துப்பாக்கிச் சூடு என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தேர்தலை பிற்போட்டால் அதிபர் தேர்தலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலோ நடத்தப்படாது.
தேர்தலை நடத்தும் பொறுப்பு வாய்ந்த நிறுவனங்கள் தேர்தலுக்கு பணமில்லை என கூறினால் அதிபர் ரணில் விக்ரமசிங்க உயிருடன் இருக்கும் வரை தேர்தலே கிடையாது என குறிப்பிட்டார்..
தேர்தலுக்கு தேவையான அனைத்து பத்திரங்களும் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், பல மாவட்டங்களுக்கான வாக்கு சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் நேற்று (பெப்ரவரி 14) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.