பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் 6.1 ரிக்டர் அளவுகோளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது அந்நாட்டின் மஸ்பதே தீவை மையமாகக் கொண்டு அதிகாலை 2 மணி அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய பிலிப்பைன்ஸ் பகுதிகளான லெகாஸ்பி நகர், வடக்கு சமார், லுசான் ஆகிய பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதுவரை அங்கு சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுகத்தை அடுத்து அங்கு மக்கள் உஷார் நிலையில் உள்ளனர்.
நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதிகளில் இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, துருக்கி நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பெரும் சேதத்தில் இருந்து சர்வதேச சமூக மீண்டு வர முடியாமல் தவித்து வரும் நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம் பதிவானது பீதியை ஏற்படுத்தியுள்ளது.
´பசிபிக் ரிங் ஆஃப் பயர்´ என்று அழைக்கப்படும் நிலநடுக்க அச்சுறுதல் அதிகம் காணப்படும் பூகோள அமைப்பில் பிலிப்பைன்ஸ் நாடு உள்ளது.
இங்கு எரிமலை வெடிப்பு, புயல், நிலநடுக்கம் போன்றவை பெருமளவில் நடைபெறுவதால் தீவிர பேரிடர் பாதிப்புகளுக்கு ஆளாக சர்வதேச நாடுகளில் ஒன்றாக பிலிப்பைன்ஸ் பார்க்கப்படுகிறது.