உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி

அவுஸ்திரேலியா அணி இந்திய அணியுடன் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் துடுப்பாட்ட போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் இடம்பெற்றது.

நாணய சுழட்சியை வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 263 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணி 262 ஓட்டங்களுக்கு சகல ஆட்டமிழப்புகளையும் சந்தித்தது. 1 ஓட்டம் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலியா அணி ஜடேஜா சுழலில் சிக்கி ஆட்டமிழப்புகளை பறிகொடுத்து 113 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.

115 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 26.4 ஓவர்கள் முடிவில் 4 ஆட்டமிழப்பிற்கு 118 ஓட்டங்கள் எடுத்து 6 ஆட்டமிழப்புகள் விதித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனால் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலையில் உள்ளது.

புதிய புள்ளிப்பட்டியல்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி - ஐசிசி புள்ளிப்பட்டியல் | World Test Championship India Rank List Icc

இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேற தனது வாய்ப்பை பிரகாசப்படுத்தி உள்ளது.

இந்திய அணிக்கு எதிராக அவுஸ்திரேலியா தோல்வி அடைந்ததை அடுத்து புதிய புள்ளிப்பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அதில் அவுஸ்திரேலியா அணி (66.67%) முதல் இடத்திலும், இந்தியா (64.06%) 2ம் இடத்திலும், இலங்கை (53.33%) 3ம் இடத்திலும் உள்ளன. எஞ்சியுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button