இன்று முதல் ஜனாதிபதிக்கு கிடைக்கவுள்ள அதிகாரம்!

எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் இன்று (20.02.2023)  ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசியலமைப்பின் 70 (1) உட்பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவுக்கு பின்னர் ஜனாதிபதிக்கு கிடைக்கவுள்ள அதிகாரம்! | President Has The Power To Dissolve Parliament

எனினும், அரசியலமைப்பின் 70 (1) (அ) உறுப்புரையின் பிரகாரம், தற்போதைய நாடாளுமன்றம் முதல் முறையாக கூடுவதற்கு நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து இரண்டு ஆண்டுகள் 6 மாதங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில், நாடாளுமன்றத் தீர்மானம் மூலம் கோராதபட்சத்தில் ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது என கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் தலைமையில், ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு 2020 ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி கூட்டப்பட்டது.

குறித்த முதல் அமர்வு இடம்பெற்று இன்று (20) இரண்டு வருடங்களும் ஆறு மாதங்கள் நிறைவடைகின்றது.

எனவே, கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகலின் பின்னர் அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவுக்கு, அரசியலமைப்பின் 70 1 (அ) உறுப்புரையின் பிரகாரம் நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை கோட்டாபய ராஜபக்ச, 2020 மார்ச் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்தார். எனினும் கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, 2020 ஆகஸ்ட் 5 ஆம் திகதி குறித்த தேர்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button