நேரடியாக ஜனாதிபதி தேர்தலை நடத்த எண்ணும் ரணில் விக்ரமசிங்க – பிற்போடப்படும் உள்ளூராட்சி தேர்தல்!
“உள்ளூராட்சி தேர்தலில் தோல்வி ஏற்பட்டால், அது அதிபர் தேர்தலை பாதிக்கும். எனவேதான் அதிபர் தேர்தலை இலக்குவைத்து உள்ளூராட்சி தேர்தலை பிற்போட அதிபர் ரணில் முயற்சிக்கிறார்”
இவ்வாறு, புதிய ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“தேர்தல் பிற்போடப்படுவதற்கு அரச அதிகாரிகளையோ, திறைசேரி செயலாளரையோ, தேர்தல் திணைக்களத்தையோ விமர்சிப்பதில் எந்தவித பயனும் இல்லை, இவர்கள் சுற்றறிக்கைகள், அமைச்சரவை முடிவுகள் மற்றும் அமைச்சரின் உத்தரவுகளின்படி செயல்படுவதற்கு சட்டத்தால் கட்டுப்பட்டவர்கள்.
இதேவேளை, இந்த வருடம் நவம்பர் மாதம் அதிபர் தேர்தலை நடத்த அதிபர் ரணில் முயற்சிகளை மேற்கொள்ளுகிறார், இதனாலே உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு முயற்சிப்பதாக சில தகவல்களின் மூலம் அறியக்கிடைக்கின்றது.” என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.