பிரித்தானிய பாஸ்போர்ட்டில் ஏற்படவுள்ள முக்கிய மாற்றம்
பிரித்தானிய பாஸ்போர்ட்டில் முக்கிய மாற்றம் ஒன்று செய்யப்படவுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சார்லஸ் பிரித்தானியாவின் மன்னரானதைத் தொடர்ந்தே பாஸ்போர்ட்டில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்படவுள்ளது.
அதாவது, தற்போது பிரித்தானிய பாஸ்போர்ட்கள் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பெயரால் வழங்கப்பட்டுவருகின்றன.
விதி மாற்றங்களைத் தொடர்ந்து, இனி பிரித்தானிய பாஸ்போர்ட்கள் மன்னர் சார்லஸ் பெயரால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் என்ன திகதியில் நிகழ இருக்கிறது என்பது குறிப்பிடப்படவில்லை. ஆனால், இந்த ஆண்டிலேயே அந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னொரு முக்கிய விடயம், இந்த மாற்றம் செய்யப்படாமால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பாஸ்போர்ட்களைப் பொருத்தவரை, அவை காலாவதியாகும் வரை செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த நீல நிற பாஸ்போர்ட்கள் பயன்பாட்டுக்கு வந்தாலும், பர்கண்டி நிற பாஸ்போர்ட்களும், அவை காலாவதியாகும் வரை செல்லத்தக்கவையாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.