உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தும் திகதி தொடர்பில் இன்று விசேட கூட்டம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தும் திகதி தொடர்பில் இன்றைய தினம் தேசிய தேர்தல் ஆணைக்குழுவில் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை குறித்து இந்த கூட்டத்தில் ஆராயப்பட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் குறைந்தபட்சம் 21 நாட்களுக்கு தேர்தல் ஒன்றை ஒத்திவைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இதேவேளை தேர்தலை ஒத்திவைப்பது குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசியல் அமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்திற்கு அமையவே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அறிவிப்பு விடுக்கப்பட்டது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.