மருந்துப் பொருட்கள் துறைமுகத்தில் தடுத்து வைப்பா..!
கொழும்புத் துறைமுகத்தில் எந்தவொரு மருந்துப் பொருட்களும் தடுத்து வைக்கப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்திய கடனுதவியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துப் பொருட்கள் தொகையொன்று துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்தி குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டுச்சபை அல்லது சுங்கத்திணைக்களம் மூலமாக அவ்வாறான மருந்துகள் எதுவும் தடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை.
அத்துடன் மருந்துப் பொருட்களுக்கு அரசாங்கம் எதுவித வரியும் அறவிடுவதும் இல்லை.
அவ்வாறான நிலையில் மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் போது அவற்றை முடிந்தளவு சீக்கிரமாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் சுங்கத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும்.
அதன்போது ஆவணங்களில் குறைபாடுகள் இருந்தால் கூட பின்னைய சந்தர்ப்பத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் நிபந்தனையின் கீழ் மருந்துப் பொருட்கள் விடுவிக்கப்படுகின்றன என சுட்டிக்காட்டியுள்ளார்.