உலகில் சிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் பேராதனை பல்கலைக்கழகத்திற்கு கிடைத்துள்ள இடம்

உலகில் சிறந்த  பல்கலைக்கழகங்கள் தொடர்பான தரவரிசையில் 901ஆவது இடத்தை பேராதனை பல்கலைக்கழகம் பெற்றுக்கொண்டுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி. லமவன்ச தெரிவித்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் இன்று -24- இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

பதின்மூன்று சிறந்த குறிகாட்டிகள் மூலம் உலகப் பல்கலைக்கழகங்கள் அவற்றின் செயல்பாட்டின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சுமார் இரண்டாயிரம் பல்கலைக்கழகங்கள் மற்றும் முப்பதாயிரம் உயர்கல்வி நிறுவனங்களைப் பயன்படுத்தி இந்த பட்டியில் தயாரிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இவ்வாறான தரவரிசையைப் பெற்றுள்ள ஒரேயொரு பல்கலைக்கழகம் பேராதனை பலக்லைக்கழகம் எனவும் இதற்கு பங்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button