கடவுச்சீட்டு பெற வருபவர்களுக்கு வழங்கப்படவுள்ள வசதி!
தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள வருகைதரும் பொதுமக்களுக்காக புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள வருகைதரும் பொதுமக்களின் வசதிக்காக, அந்த இடத்தில் இருக்கைகளை பொருத்த நகர அபிவிருத்தி சபை நடவடிக்கை எடுத்து வருகிறது.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் கள ஆய்வுப் பயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் ஆட்பதிவு திணைக்களத்திற்கு கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்கு வருகைதரும் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை ஆராய்ந்துள்ளார்.
குறித்த திணைக்களங்களுக்கு வருகைதரும் மக்கள் உட்காருவதற்கு போதிய இருக்கைகள் இல்லாததால், மரங்களின் கீழ், சுவர்களுக்கு மேல், வீதிகளில் அமர்ந்து விடுகின்றனர்.
இதற்கு தீர்வாகவே அந்த இடத்தில் பொதுமக்கள் அமர்வதற்கு இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.