டி20 உலக கிண்ணம் – இறுதிப்போட்டி இன்று!

8 வது மகளிர் டி20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ´ஏ´ பிரிவில் அவுஸ்திரேலியா (8 புள்ளி) முதலிடமும், தென்ஆப்பிரிக்கா (4 புள்ளி) 2 வது இடமும், ´பி´ பிரிவில் இங்கிலாந்து (8 புள்ளி) முதலிடமும், இந்தியா (6 புள்ளி) 2 வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

கேப்டவுனில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது அரையிறுதியில் அவுஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதின. இதில் 5 முறை செம்பியனான அவுஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

கேப் டவுனில் நேற்று நடந்த 2 வது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதின.

நாணய சுழற்சியை வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்கள் எடுத்தது. 165 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 158 ஓட்டங்களே எடுத்தது.

இதனால் தென் ஆப்பிரிக்க அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றதுடன், முதல் முறையாக டி20 உலக கிண்ண இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில், இன்று நடக்கும் டி20 உலக கிண்ண இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button