அரசாங்க மருத்துவமனைகளில் கட்டண வார்ட்டுகள் ஸ்தாபிக்க நடவடிக்கை
அரசாங்க மருத்துவமனைகளில் கட்டண வார்ட்டுகளையும், தனியார் மருத்துவமனைகளில் இலவச வார்ட்டுகளையும் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையொன்றின் மூலம் இந்த விடயம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தற்போதைய மருந்துப் பற்றாக்குறை சூழலை சமாளிக்கும் வகையில் இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் மேலும் சில மேலதிக மருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் சுகாதாரத்துறைக்கு அரசாங்கம் கூடுதல் நிதியை ஒதுக்கவுள்ளது.
அதே போன்று எதிர்வரும் காலங்களில் அரசாங்க மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் வார்ட்டுகளை உருவாக்கவும், அதற்கு சமாந்தரமாக தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் இன்றி ஏழைகள் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ள இலவச வார்ட்டுகளை உருவாக்கவும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.