கொழும்பு மற்றும் எல்ல பகுதிக்காக டிக்கெட் தொகை – அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்

கொழும்பு மற்றும் எல்ல பகுதிக்காக டிக்கெட் தொகை - அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள் | Tickets Are On Sale For Usd 99

கொழும்பு மற்றும் எல்ல பகுதிக்கு இடையில் இயங்கும் எல்ல ஒடிஸி ரயிலுக்கான டிக்கெட்டுகளை 5,000 ரூபாய்க்கு ரயில் திணைக்களம் விற்பனை செய்து வருகின்றது.

இந்த நிலையில் ​​தனியார் நிறுவனம் ஒன்று தாம் ரயில் சேவை தொடங்குவதாக கூறி ஒரு டிக்கெட்டை 36,000 ரூபாய்க்கு (99 அமெரிக்க டொலர்கள்) ஒன்லைனில் விற்பனை செய்யும் மோசடியை தொடங்கியுள்ளது.

இது விடயம் போது போக்குவரத்து அமைச்சகத்திற்கு பாரிய அளவில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் மிகவும் பிரபலமான ரயில் பயணங்களின் ஒன்றான எல்ல ரயில் நிலையத்திற்கு செல்வதற்கு இவ்வளவு பெரிய தொகையை வசூலிக்கும் விளம்பரத்தை குறித்த நிறுவனம் ஏற்கனவே இணையத்தில் வெளியிட்டுள்ளது.

ரயில் பாதை மற்றும் அரச ரயில் சேவையில் பயன்படுத்தப்படும் வசதிகளை எடுத்துக்கொண்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பிற பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனங்களை அரச ரயில் சேவையுடன் தொடர்புடையவர்கள் ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசாங்க புகையிரத சேவையுடன் தொடர்புடைய இரண்டு தொழிற்சங்கங்களின் பலமானவர்கள் இந்த புதிய நிறுவனத்தின் ஊடாக புகையிரத பயணிகளிடம் அதிகளவான பணத்தை அறவிட முற்படுவது பெரும் அநீதி எனவும் பயண முகவர் நிலையங்கள் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button