அதிக கோல்கள் அடித்ததில் ரொனால்டோ முதலிடம் மெஸ்ஸி இரண்டாமிடம்

தனியார் கால்பந்து அணிகளில் இணைந்து விளையாடும் லியோனல் மெஸ்ஸி தமது 700 வது கோலை PSG அணிக்காக பதிவு செய்துள்ளார்.

திங்களன்று நடந்த Marseille அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் 3 – 0 என்ற கோல் கணக்கில் PSG அணி அபார வெற்றி பெற்றிருந்தது.

இந்த ஆட்டத்தில் தான் எம்பாப்பே உருவாக்கிய கோல் வாய்ப்பை, ஆட்டம் தொடங்கி 29வது நிமிடத்தில் மெஸ்ஸி கோலாக மாற்றினார்.

19 ஆண்டு கால கால்பந்து வாழ்க்கையில் நீண்ட 15 ஆண்டு காலம் பார்சிலோனா அணியிலேயே நீடித்த மெஸ்ஸி, தமது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டு, பிரான்ஸ் அணியான PSG-க்கு மாறினார்.

2021 ஆகஸ்டு மாதத்தில் இருந்தே PSG அணிக்காக களம் காணும் மெஸ்ஸி, இதுவரை அந்த அணிக்காக 28 கோல்களை பதிவு செய்துள்ளார்.

35 வயதான மெஸ்ஸி தமது பார்சிலோனா காலகட்டத்தில் மொத்தம் 778 ஆட்டங்களில் 672 கோல்களை பதிவு செய்துள்ளார்.

2006ல் Espanyol அணிக்கு எதிராக முதல் முதலில் மெஸ்ஸி களமிறங்கினார்.

கிளப் அணிகளுக்கான கோல் கணக்கில் ரொனால்டோ 709 எண்ணிக்கையுடன் முதலிடத்தில் உள்ளார்.

மூன்றாவது இடத்தில் மறைந்த ஜாம்பவான் பெலெ 679 கோல்களுடன் உள்ளார்.

நான்காவது இடத்தில் 691 கோல்களுடன் ரொமாரியோவும் 645 கோல்களுடன் Ferenc Puskas என்ற வீரரும் உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button