புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் – அமைச்சரவை அனுமதி!

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதனை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்,வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் - அமைச்சரவை அனுமதி! | New Law Implement By Parliament Ministry Said

மேலும்,

சட்டவரைஞர்களால் உருவாக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவுக்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அந்தவகையில், இந்த சட்டவரைவை வர்த்தமானியில் வெளியிடவும், அதன்பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button