நியூசிலாந்தில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 6.9 ரிக்டரில் பதிவாகியுள்ளது!
துருக்கி, சிரியாவை தொடர்ந்து தற்போது பல நாடுகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் அதிகமாக ஏற்பட்டு வருகின்றன.
அந்தவகையில், நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் இன்று திடீரென்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளது.
இதேவேளை, சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், குறித்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.